ஒலிம்பிக் ஹாக்கி : ஸ்பெயினை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி ….!!!

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள்  ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது .

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் நடந்த    3-வது லீக் சுற்றில்  ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. அப்போது ஆட்டத்தின்     14-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை அடித்தார்.இதற்கு அடுத்த நிமிடத்திலேயே ருபிந்தர்பால் சிங் 2-வது  கோலை அடிக்க ,முதல் கால்பகுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து நடந்த 2-வது மற்றும் 3வது கால் இறுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக 4-வது கால் இறுதி ஆட்டத்தில் ருபிந்தர் பால் சிங் கோலை அடித்தார். இதனால் இறுதியாக இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *