ஒலிம்பிக் ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தி …. இந்திய ஆடவர் அணி அபார வெற்றி ….!!!

ஒலிம்பிக் ஆடவர்  ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி  பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான  ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத்  சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .இதனால் இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. இதையடுத்து 19-வது நிமிடத்தில் ஜப்பான் அணியில் டனகா முதல் கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து 3-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி  33-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ஜப்பான் அணி 2 கோல் அடித்தது .இதனால் இரு அணிகளும் சமனில்  இருந்தது. இதன் பிறகு ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. இதில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடியது. அப்போது ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இந்திய அணியில் ஷம்ஷர் சிங் மற்றும்  51 -வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மா இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து  பெனால்டி கார்னர் முறையில்  இந்திய அணி மேலும் ஒரு கோல் அடிக்க 5-ஆக  அதிகரித்தது. இறுதியாக 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *