ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்தை வீழ்த்தி …. இந்திய மகளிர் அணி வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்அயர்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி   பெற்றது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை .

இதனால் 3  மணிநேர பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் 57-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர்  ஒரு கோல் அடித்தார் . இதனால் இறுதியாக 1-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *