ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி …. மீண்டும் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான  ஹாக்கி போட்டியின் இந்திய அணி, இங்கிலாந்திடம்  தோல்வியடைந்தது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம்   5-1 என்ற கணக்கிலும் , ஜெர்மனியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி , இங்கிலாந்துடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி முதல் கோலை  பதிவு செய்தது.

இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் ஒரு கோல் அடிக்க 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து 3-வது மற்றும் 4-வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிகள் 2 கோல்களை பதிவு செய்வது. இறுதியாக 4-1  என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *