ஒலிம்பிக் ஹாக்கி : அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி …. போராடி தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்திய  அணி போராடி தோல்வியடைந்தது .

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் முதல் கால்பகுதி ஆட்டத்தில் 7-வது  மற்றும் 8- வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் , மந்தீப் சிங்தலா இருவரும் தலா  ஒரு கோல் அடித்தனர்  .இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து 2-வது கால்பகுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்ததால் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தது.

3-வது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து  4-வது கால்பகுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி பெனால்டி கார்னர் மூலம் 2 கோல்களை அடித்தது.இறுதியாக 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.இதனால் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்து வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *