ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து …. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி  தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , சீன தைஃபேயின் தை சூ-யிங்கை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-8  என்ற கணக்கில் பி.வி. சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன்பிறகு தை சூ-யிங் 21-18,  21-12 ஆதிக்கம் செலுத்தியாதல் 18-21 என்ற கணக்கில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.

இதையடுத்த நடந்த 2-வது செட்டில் தொடக்கத்தில் இருந்தே  தை சூ-யிங்  ஆதிக்கம்  செலுத்தினார். இதனால் இறுதியாக 21-18,  21-12 என்ற நேர் செட் கணக்கில் பி.வி .சிந்து-வை தோற்கடித்த ,தை சூ-யிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். எனவே இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி .சிந்து நாளை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான  போட்டியில் சீனாவின் ஹிபிங்கை எதிர்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *