ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து …. காலிறுதிக்கு முன்னேறினார்….!!!

 டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள்  நடந்து  வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற 16-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , டென்மார்க் வீராங்கனை மியா பிலிசெல்டை எதிர்கொண்டார்.

இதில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெற உள்ள காலிறுதிச்சுற்றில் கொரிய அல்லது ஜப்பான் வீராங்கனையுடன் பி.வி.சிந்து மோத உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *