என்ன காரணமா இருக்கும்…? மேம்பாலத்தில் தொங்கிய சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-சென்னை இணைப்பு சாலை ரயில்வே மேம்பாலத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தூக்கில் தொங்கிய முதியவர் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் வசித்த மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *