தீராத வியாதியால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியன் பட்டணம் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தினேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மூல வியாதியால் அவதிப்பட்ட பெரியசாமி வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *