நடந்து சென்ற முதியவர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள கொல்லாபுரம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனம் முத்துக்குமார் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *