பயங்கரமாக மோதிய கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான ராஜ்மோகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.