கோலாகலமாக நடைபெற்ற விழா…. முதியவருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மாடு முட்டி படுகாயமயடைந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி குப்பம் அருகே மேல்மாயில் கிராமம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு மாடு விடும் விழா நடைபெற்றது. அப்போது வெங்கடேசன் என்ற முதியவர் மாடு முட்டி படுகாயம் அடைந்தார். எனவே அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *