இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள முத்தம்பட்டியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பச்சை அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் சென்று அவரை பார்த்தபோது சுயநினைவின்றி இருப்பது தெரிய வந்தது.
பின்னர் முதியவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.