மாடு முட்டி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் பொங்கல் விழாவையொட்டி காளை விடும் விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த காளைகள் பங்கேற்க செய்யப்பட்டன. இந்த விழாவிற்கு சப்-கலெக்டர் தலைமை தாங்கினார். அதோடு விழாவில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் 3500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு களித்தனர்.
அப்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மாடு முட்டி படுகாயமடைந்தார். இதனையடுத்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அவர் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.