உருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…!!

அடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டி மீது மற்றொரு வாகனம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இரவு நேரம் என்பதால் மூதாட்டியின் உடல் கிடப்பது தெரியாமல் அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் அவரின் உடல் மீது ஏறி வேகமாக சென்றுள்ளன.

இதனை அடுத்து உருவம் கூட தெரியாத அளவிற்கு உடல் நசுங்கி சாலையோடு ஒட்டி இருப்பதாக அவ்வழியாக சென்ற சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையிலிருந்து மூதாட்டியின் உடலை எடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *