மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் சாலையில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து மணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *