“குடும்பத்தினருடன் வாழ பிடிக்கவில்லை” தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி…. கரூரில் பரபரப்பு….!!!

வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை வழியாக பெட்டவாய்த்தலை வரை தென்கரை வாய்க்கால் செல்கிறது. இங்கு மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் குதித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் வாய்க்காலில் நீந்திச் சென்று அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அவரிடம் இதுபற்றி கேட்ட போது தனது குடும்பத்தினருடன் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள  போவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கரூரில் உள்ள கீரனூர் பகுதியில் வசித்து வரும் சின்னகவுண்டர் மனைவி ராசம்மாள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மூதாட்டியை குளித்தலையில் அமைந்துள்ள தனியார் காப்பகத்தில் காவல்துறையினர் சேர்த்தனர். மேலும் இது பற்றி மூதாட்டியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காப்பகத்திற்கு வந்த மூதாட்டியின் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துள்ளனர். ஆனால் மூதாட்டி குடும்பத்தினருடன் செல்ல மறுத்ததால் அவரை அங்கேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *