“என்னால் வலி தாங்கமுடியவில்லை” மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் திருமணமான சிறிது நாளிலேயே கணவரை விட்டு பிரிந்து வந்த இவர் தனது தம்பி வெங்கடேசன் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் இரும்பு தகடு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ராணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *