“தங்களுடைய பணம் கீழே சிதறியுள்ளது” முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!!

முதியவரின் பின்னால் 10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு 2 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் குறிஞ்சி நகரில் உதயசூரியன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திரு.வி.க நகரில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உதயசூரியனின் பின்னால் 10 ரூபாய் நோட்டுகளை சிதற விட்டதோடு தங்களது பணம் கீழே கிடப்பதாக கூறினர். உடனே அவர் கீழே பைசாவை எடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும் உதய சூரியனிடமிருந்த பணம் 2 லட்சத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உதயசூரியன் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *