நோயால் அகற்றப்பட்ட கால் விரல்கள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கசேலம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கோவிந்தனின் காலில் இருந்த நான்கு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கோவிந்தனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply