சாலையில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மன்றம் பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பபாளையத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குரும்பபாளையம்- வடசித்தூர் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply