கோவிலில் இருந்த பூசாரி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரியான ராஜா என்பவர் பக்தர்கள் கொண்டு வந்த பால், தேங்காய், பழங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.