“அந்த வழியா போக முடியல” சாலையில் கொட்டி கிடந்த எண்ணெய்…. போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்….!!!

சாலையில் கொட்டி கிடந்த எண்ணெய் மீது காவல்துறையினர் மண்ணை போட்டு சரி செய்துள்ளனர்.

திருச்சியில் டி.வி.எஸ் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் வழுக்கும் தன்மையுள்ள ஆயில் கொட்டியுள்ளது. இந்த ஆயில் ஒரு கண்டெய்னர் லாரியிலிருந்து கொட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சாலையில் வந்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வழிக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த ரோந்து பணியில் இருந்த போலீஸ் சார்பின் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் சாலையில் கொட்டிக் கிடந்த ஆயில் மீது மண்ணைக் கொட்டி சரி செய்துள்ளனர். அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சாலையில் அச்சமின்றி சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரின்  இந்த செயலைப் பார்த்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *