ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,  இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து பேசி இருப்பார். பிரச்சாரத்தில் நீங்கள் பார்த்திருப்பீங்க,  கேள்விபட்டீர்களா? எங்கே அதிமுக வேட்பாளர் போனாலும் துரத்தி அடிக்கிறாங்க.

அந்த விரக்தியில் என்னென்னவோ பேசுகிறார். மீசை இருக்கா என  கேட்கிறார் ? மீசை வச்ச ஆம்பளையானு கேட்கிறார். வேட்டி கட்டுன ஆம்பளையா என கேட்குறாரு. இதெல்லாம் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டிய பேச்சா ? அதுவும் பெரியார் பிறந்த மண். பெண்களுக்கு சம உரிமை,  சமூக நீதி பேசுகின்ற பெரியார் மண்ல வந்து ஆம்பளையான்னு கேக்குறாரு. நான் திருப்பி கேட்டால் எவ்வளவு அசிங்கமா இருக்கும். இவர் எப்பேர்ப்பட்டவர்கள் உங்களுக்கு தெரியும்.

எப்படி முதலமைச்சர் ஆனார் ? மூணு வருஷம் முதலமைச்சராக இருந்தார் இல்ல… ஞாபகம் இருக்கா ? நம்முடைய முதலமைச்சர் மக்களை சந்தித்து, மக்கள் வாக்களித்து, தேர்ந்தெடுத்த முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். ஆனால் இவர் அம்மையார் மறைவுக்கு பிறகு முதல்வர் ஆகி மூன்று வருடம் இருந்தார். எப்படி முதல்வர் ஆனார் ஞாபகம் இருக்கா ? என சொல்லி எடப்பாடி பழனிசாமி கூவத்தூரியில் முதல்வராக அறிவித்த சசிகலாவின் காலில் விழுந்த போட்டோவை காண்பித்து பேசினார்.

அப்போது இவரு சொல்றாரு நீ மீசை வச்சிருக்கியா ? நீ ஆம்பளையா ? ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிட்டத்தட்ட ஆண்மை பரிசோதனை செய்யுற  மருத்துவராக மாறிவிட்டார். ஏழு நாள் சேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும் மீசை வரும்.  திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவருடைய கட்சி பெயரில் பேரறிஞர் அண்ணாவுடைய பெயர் இருக்கு.  அவருடைய கட்சி கொடியில் அண்ணாவினுடைய உருவம் இருக்கு.

பேரறிஞர் அண்ணா சொன்னது என்ன ? ஆட்டுக்கு தாடியும்,  நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்று சொன்னவர்தான் பேரறிஞர் அண்ணா. ஆனால் இவர் அந்த ஆளுநருக்கு போட்டி போட்டுக் கொண்டு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர் அண்ணாவுக்கும் உண்மையாக இல்லை, மறைந்த தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கும் உண்மையாக இல்லை, மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும்  உண்மையாக இல்ல.

மறைந்த ஜெயலலிதா அம்மையார் தங்கக்கூடிய இடம் கொடநாடு எஸ்டேட். அந்த அம்மா மறைவுக்கு பிறகு எத்தனையோ கொலைகள், மூன்று கொலைகள். எத்தனையோ கொள்ளைகள். அதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்ததா ? அதுக்கெல்லாம் பதில் சொன்னார்களா ? என பேசினார்