ஓஹோ…! அதான் பல்கலைக்கழகத்தை மூடுனாங்களோ ? இப்போ புரிந்து கொண்டதாக சிவி சண்முகம் பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு என்ன நடக்கிறது ? அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகத்திற்கென்று தேர்வு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் செம்மண் கொள்ளை நடைபெறுகிறது. இப்போது தான் தெரிகிறது ஏன் அந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் ?

செம்மண் கொள்ளை அடிப்பதற்காக பல்கலைக்கழகத்தை தேர்வு செய்ததற்காக எடுக்கப்பட்ட நிலத்தில் இன்றைக்கு தினம் தோறும் 500 கணக்கான, ஆயிரக்கணக்கான வண்டிகளில் செம்மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. செம்மண் கொள்ளை அடித்தவர் யார் என்பது நாட்டு மக்களுக்கும்,  விழுப்புரம் மக்களுக்கும் தெரியும். நீதிமன்றத்திற்கு தினந்தோறும் படி ஏறி சென்று கொண்டிருக்கின்ற அமைச்சர் யார் என்பதும் தெரியும்.

அப்போது அந்த அமைச்சர் ஏன் அந்த பல்கலைக்கழகத்தை மூடினார் என்பது தெரிந்து விட்டது. அது மட்டுமல்ல விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகம் வந்தால் இங்கே படிக்கின்ற மாணவர்களுக்கு இலவசமான கல்வி கிடைக்கும். அப்படி வந்தால் இவர்களுடைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படாது. இப்போது உங்களுக்கு தெரியும் மயிலத்தில் திமுக திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அரசு பல்கலைக்கழகம் இருந்தால் அந்த பல்கலைக்கழகம் செயல்படாது, அதற்காக இவர்கள் இவர் கட்சியைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, ஸ்டாலின் குடும்பத்தை சார்ந்த பினாமியின் பெயர்களில் தொடங்கப்பட்டிருக்கின்ற பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், கொள்ளையடிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அம்மா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் என விமர்சித்தார்.