அட!…. என்னப்பா இது…. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே…. மைனாவுக்கு அந்த மாதிரி புத்திலாம் இருக்குதாம்…..!!!!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று குயின்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த எலிமினேட் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியான பிறகு 2-வது ப்ரோமோவும் வெளியானது. அந்த ப்ரோமோவின்படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இவரை பாராட்டினால் கண்டிப்பாக பின்னால் போய் ஏதாவது பேசுவார் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதோடு யாராவது ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள் எனவும் கமல் கூறினார். உடனே தனலட்சுமி மற்றும் ஜனனி இருவரும் மைனா நந்தினியின் பெயரை சொன்னார்கள்.

அதைக் கேட்டவுடன் மைனா நந்தினி அவர்கள் சொன்னது உண்மைதான். கண்டிப்பாக அது நான் இல்லை என்று மறுக்க மாட்டேன் என்று கூறினார். எனக்கு கண்டிப்பாக புறம் பேசும் போது இருக்கிறது சார் என்று கமலிடம் மைனா கூறினார். மைனா நந்தினி இப்படி சொன்னது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நடிகையாக இருந்து கொண்டு தன்னை பற்றி ஓபன் ஆக மைனா சொன்னது ஒருவகையில் பாராட்டுக்குரிய விஷயம் தான் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இதே இடத்தில் அசீம இருந்திருந்தால் கண்டிப்பாக அது நான் இல்லவே இல்லை என்று மறுத்து இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.