கர்நாடக மாநிலம் பெங்களூரில் BMTC பேருந்தில் பயணித்த பயணிக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுனர் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை பேருந்தில் பயணித்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.