அட பாவிகளா…!! இப்படியா செய்விங்க…. தண்டவாள கொக்கி அகற்றல்…. தீடீர் திருப்பம்…!!

 சேலம் மாவட்டத்தின் இரயில்வே தண்டவாளத்தின் கொக்கிகளை அகற்றியது ஊழியர்கள் என்று இரயில்வே ஐ.ஜி வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று நடைபெற்றது. மேலும் 40 கொக்கிகளை இல்லாத போது இரயில் வந்தால் கண்டிப்பாக இரயில் கவிழும் என்று உறுதி செய்யப்பட்டு இரயில்வே போலீசார் விசாரணையை தொடங்கினர்.

என்ன காரணத்திற்காக கொக்கிகள் அகற்றப்பட்டது என்ற விசாரணையில் தீடிர் திருப்பமாக  ரயில்வே ஐ.ஜி வனிதா சொல்லும் போது அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும் ரயில்வே ஊழியர்கள் இரு குழுக்களாக பிரிந்து இருக்கின்றனர்.அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதாகவும், அந்த பிரச்சினை காரணமாக ரயில்வே ஊழியர்கள் தான் இந்த கொக்கிகளை அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் எந்தெந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தார்களோ  அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.