ஹனி டிராப் வழக்கு: மத்தியப் பிரதேச ஹோட்டல், ஊடக அலுவலகத்தில் சோதனை..!!

ஹனி டிராப் வழக்கில் சிக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் ஊடக அலுவலகங்களில் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். 

மத்தியபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களை அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பெரிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கி அரசின் முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் சில காரியத்தை சாதித்துக் கொண்டதாக சிலர் மீது புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image result for The raids were carried out by police and Indore district officials on Saturday night at the residence of the businessman Jitendra Soni, at the office of an eveninger run by him,

இந்த வழக்கில் ஆர்த்தி தயால், மோனிகா யாதவ், ஸ்வேதா விஜய் ஜெயின், ஸ்வேதா சொப்னைல் ஜெயின், பர்கா ஜெயின் மற்றும் ஓம் பிரகாஷ் கோரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய உள்ளூர் தொழிலதிபர் ஜித்தேந்திர சோனியின் அலுவலகம், ஊடக அலுவலகம் மற்றும் ஹோட்டல்களில் நேற்று உரிய அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

Image result for The raids were carried out by police and Indore district officials on Saturday night at the residence of the businessman Jitendra Soni, at the office of an eveninger run by him,

தொடர்ந்து ஊடக அலுவலகத்தை அலுவலர்கள் சீல் வைத்தனர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஊடக அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஊடக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட சம்பவம் விதிமீறல் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *