பேங்க் ஆப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை…!!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 25 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

Data Analyst – 04
Data Manager – 02
Data Engineer – 04
Business Analyst – 02
Mobility & Front End Developer – 06
Integration Expert – 02
Emerging Technologies Expert – 04
Technology Architect – 01

தகுதி: 

கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ முடித்தவர்கள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 5,6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு:

 அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை மற்றும் கட்டணம் : 

Image result for bank of baroda

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bankofbaroda.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். .

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/new-detailed-adv-baroda-sun-technologies.pdf என்ற வங்கி லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 02.09.2019