தேர்தல் பணிக்காக சென்ற அதிகாரி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேர்தல் பணிக்கு வந்த அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான ஞானசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள அத்தியூத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிக்கு துணை தேர்தல் அலுவலராக சென்றுள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் சேகரன் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென சேகரனுக்கு நெஞ்சு வலி வந்ததால் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *