அலுவலகம் செல்லாமல்…. ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ்… வாங்குவது எப்படி…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!

அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தேவைப்படும் ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் புகைப்படம்

குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம்

தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை

முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி உருவாகும்.

அதன்பின் நீங்கள் கொடுத்த லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவேண்டும். பின்னர் Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து Unemployment Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் CAN register செய்யவேண்டும்.

CAN எண் தெரியாதவர்கள் உங்களது பெயர் மற்றும் தந்தை பெயரை உள்ளீடு செய்வது மூலம் தேடிக்கொள்ளலாம். CAN கொடுத்த பின்பு உங்களது விவரங்கள் வந்துவிடும். பின்னர் இருக்கும் படிவத்தில் உங்களது கல்வி மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டும்.

தொடர்ந்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவேண்டும். பின்னர் ஒரு Self Declaration Form வரும் இதை பிரிண்ட் செய்து ஒப்பிட்டு மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். அடுத்ததாக பணம் செலுத்தும் வசதி வரும். அதில் ஆன்லைன் மூலம் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.

உங்களது விண்ணப்பம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, சான்றிதழ் கிடைத்ததும் உங்களது தொலைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். பின்னர் இதே இணையதளத்தில், உங்களது லாகின் ஐடி மூலம் உள்நுழையும் போது சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *