வரலாற்றில் இன்று அக்டோபர் 15…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 15

கிரிகோரியன் ஆண்டு : 288_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 289_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 77 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.

1529 – வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.

1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

1764 – ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.

1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியின் மனைவியும் அரசியுமான மரீ அண்டோனெட் பாரிசு நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அடுத்த நாள் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1815 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1851 – இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வணிகக் கண்காட்சி முடிவுற்றது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசூரி, கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன.

1878 – மின்குமிழ் தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை எடிசன் ஆரம்பித்தார்.

1879 – எசுப்பானியாவின் தென்கிழக்கே செகூரா ஆறு பெருக்கெடுத்ததில், 1,077 பேர் உயிரிழந்தனர்.

1880 – செருமனியில் கோல்ன் கதீட்ரல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

1904 – உருசிய-சப்பானியப் போர்: உருசியாவின் பால்ட்டிக் கடற்படை தூர-கிழக்கு நோக்கிய 77ழு-மாதப் பயணத்தை ஆரம்பித்தது.

1917 – முதலாம் உலகப் போர்: செருமனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.

1932 – டாட்டா ஏர்லைன்சு விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1934 – சீன சோவியத் குடியரசு கலைந்தது. சங் கை செக்கின் தேசிய புரட்சி இராணுவம் ருயிச்சின் நகரை வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தது, கம்யூனிஸ்டுகள் வெளியேறினர்.

1940 – காத்தலோனியாவின் அரசுத்தலைவர் லூயிசு கொம்பானிசு எசுப்பானிய அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி சோவியத் ஒன்றியத்துடன் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, செருமனி அங்கேரிய அரசை மாற்றியது.

1944 – இட்லரின் நாட்சிக் கட்சிக்கு ஒப்பான “அம்புக் குறுக்குக் கட்சி'” அங்கேரியில் ஆட்சியைப் பிடித்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்து ரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.

1946 – அனைத்துலக நீதிமன்றம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஐநா பாதுகாப்புப் பேரவை ஏற்றுக் கொண்டது.

1953 – பிரித்தானியா டோட்டெம் 1 என்ற தனது அணுகுண்டு சோதனையை தெற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தியது.

1954 – வட அமெரிக்காவில் ஏசெல் சூறாவளி தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். டொரோண்டோ வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

1956 – போர்ட்ரான் என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1957 – பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான திருகோணமலைத் துறைமுகத்தை  பிரித்தானியா இலங்கையிடம் கையளித்தது.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் இருப்பதாக நடுவண் ஒற்று முகமை அமெரிக்க அரசுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.

1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

1967 – “சுடாலின்கிராட் சண்டையின் வீரர்களுக்காக” தாய்நாடு அழைக்கிறது என்ற சிலை திறந்து வைக்கப்பட்டது.

1970 – மெல்பேர்ண் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட மேற்கு வாசல் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1979 – எல் சல்வடோர் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1987 – புர்க்கினா பாசோவில் அரசுத்தலைவர் தோமசு சங்காரா மீது இராணுவப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1995 – சதாம் உசேன் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஈராக்கின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1997 – நாசாவின் இயூஜென்சு விண்ணுளவி சனிக் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் வியாழனின் ஐஓ சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.

2003 – சீனா முதற்தடவையாக சென்சோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.

2006 – அவாயில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலச்சரிவுகள், மின்சார நிறுத்தம், உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது.

2008 – தாய்லாந்தும் கம்போடியாவும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2013 – பிலிப்பீன்சை 7.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 215 பேர் உயிரிழந்தனர்.

2016 – ருவாண்டாவில் 150 நாடுகள் ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட உச்சி மாநாட்டில் பங்குபற்றின.

இன்றைய தின பிறப்புகள் : 

கிமு 70 – வேர்ஜில், உரோமைக் கவிஞர் (இ. கிமு 19)

1218 – ஊலாகு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1265)

1265 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1307)

1542 – அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605)

1829 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (இ. 1907)

1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. 1900)

1855 – சுப்பராயலு, சென்னை மாகாண முதலமைச்சர் (இ. 1921)

1863 – நெவின்ஸ் செல்வதுரை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (இ. 1938)

1881 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975)

1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர் இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. 1975)

1904 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (இ. 1949)

1909 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (இ. 2002)

1913 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. 1976)

1924 – ஏ. பீம்சிங், தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (இ. 1978)

1926 – மிசேல் பூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1984)

1926 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 2011)

1927 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (இ. 2015)

1928 – எசு. எம். கமால், தமிழக வரலாற்று ஆய்வாளர். (இ. 2007)

1931 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (இ. 2015)

1931 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)

1934 – என். ரமணி, இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015)

1935 – பாபி ஜோ மோரோ, அமெரிக்க ஓட்ட வீரர்

1935 – மரியா தெரேசா மிராபெல், டொமினிக்கன் குடியரசு பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. 1960)

1936 – மதன் லால் குரானா, இந்திய அரசியல்வாதி

1939 – கே. டி. பிரான்சிஸ், இலங்கை துடுப்பாட்ட நடுவர் (இ. 2013)

1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து சமய ஞானி

1944 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2005)

1946 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. 2012)

1949 – பிரணாய் ராய், இந்திய ஊடகவியலாளர்

1957 – மீரா நாயர், இந்திய-அமெரிக்க நடிகை

1988 – மெசுத் ஓசில், செருமானிய காற்பந்து வீரர்

1994 – பாபர் அசாம், பாக்கித்தானொயத் துடுப்பாளர்

1995 – நிவேதா தாமஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள் : 

925 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864)

1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)

1564 – ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. 1514)

1764 – மருதநாயகம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1725)

1917 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (பி. 1876)

1918 – சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)

1930 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1866)

1938 – வீணை தனம்மாள், தமிழக வீணைக் கலைஞர் (பி. 1868)

1946 – எர்மன் கோரிங், செருமானிய அரசியல்வாதி (பி. 1893)

1958 – எலிசபெத் அலெக்சாந்தர், பிரித்தானிய நிலவியலாளர், இயற்பியலாளர் (பி. 1908)

1961 – சூர்யகாந்த் திரிபாதி, இந்தியக் கவிஞர் (பி. 1896)

1987 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1949)

1988 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1909)

2004 – டி. ஆர். பாப்பா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1923)

2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன், சைவத் திருமுறை ஓதுவார் (பி. 1923)

2009 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)

2010 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (பி. 1927)

2012 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. 1922)

2018 – பவுல் ஆல்லென், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1953)

இன்றைய தின சிறப்புநாள் : 

ஆசிரியர் நாள் (பிரேசில்)

வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் (ஐக்கிய அமெரிக்கா)

உலகக் கைகழுவும் நாள்

உலக மாணவர் நாள்

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *