ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வருகை…… சில நிமிடங்களில் வெளியிடுகிறார் வேட்பாளர் பட்டியலை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில்  துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வமும்  அதிமுக தலைமையகம் வந்துள்ளார் .

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 20 இடங்களில் தொகுதியிலும் போட்டியிடுகின்றது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று  சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

Image result for அதிமுக  கூட்டணி வேட்பாளர்

 

மேலும் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் காலையில் நடைபெற்றது. இதையடுத்து நாடாளுமன்ற அதிமுக தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில நிமிடங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்த நிலையில் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமையகம் வந்துள்ளார்.இன்னும் சில நிமிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளதால் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.