ஓ.டி.டியில் வெளியாகும் விஜய்சேதுபதியின் படம்… தேதி அறிவிப்பு… ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கணவர் பெயர் ரண சிங்கம் திரைப்படம் அக்டோபர் 2ம்  தேதி ஜீபிளக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பல படங்கள் வெளியீடு செய்ய முடியாமல் முடங்கி உள்ளன. இதனால் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டியில் வெளியானதை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விருமாண்டி டைரக்சனில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கிராமத்து மக்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ள கணவர் பெயர் ரண சிங்கம் திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஜீபிளக்ஸ் இணையதளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *