“என்னை விட மாட்டாங்க” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சடையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமங்கலத்தில் இருக்கும் தனது தோழிகளுடன் அறை எடுத்து தங்க அனுமதி தருமாறு சிவரஞ்சனி தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சிவரஞ்சனியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *