ஒரு உயிரோட விளையாடலாமா….? செவிலியரின் அலட்சியம்…. தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நடந்த விபரீதம்….!!

துணை செவிலியர் ஒருவர் பெண்ணிற்கு அலட்சியமாக இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மந்தவுளி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் கமலேஷ் குமாரி என்ற பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துணை செவிலியர் அர்ச்சனா என்பவர் குமாரிக்கு செல்போனில் பேசிக்கொண்டே இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதனை கவனிக்காத குமாரிக்கு கையில் வீக்கமும், தடுப்பூசி போட்ட பிறகு மிகுந்த வலியும் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குமாரியின் மகன், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதால் தனது அம்மாவின் கை வீங்கி விட்டதாகவும், இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த குமாரியின் உறவினர்கள் தலைமை மருத்துவ அதிகாரியிடம் துணை செவிலியர் அர்ச்சனாவின் அலட்சியம் குறித்து புகார் அளித்துள்ளனர். இவ்வாறு அலட்சியத்துடன் செயல்பட்டு துணை செவிலியர் பெண்ணுக்கு இரு டோஸ் தடுப்பூசி போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.