நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது

நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து உள்ளது இதனை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து மக்களிடமும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றன

மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

இதனை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகள் இரட்டை இலை சின்னம் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தனர் இதனை அடுத்து விசாரிக்கப்பட்ட மனுவானது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்து இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைத்தது

இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் குக்கர் சின்னத்தை மக்களவை தேர்தலுக்கு அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது  ஒரு கட்சியாக கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை ஆகவே குக்கர் சின்னம் கிடைக்கும் என்பது சந்தேகம்தான் ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் குக்கர் சின்னத்தை காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சட்டென்று குக்கர் சின்னம் கிடைக்காமல் வேறு சின்னம் கிடைத்தால் தேர்தலுக்கு முன்பாக அந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய சிரமத்திற்கு ஆளாவார்கள்

மேலும் நாம் தமிழர் கட்சி கடந்த வருடம் வரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரித்து வந்தனர்

இதனையடுத்து தற்போது மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி ஆனது கிடைக்கவில்லை அதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை அளித்துள்ளது இதனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் படுத்தி வைத்து உள்ளார் இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் இந்த சின்னத்தை தேர்தலுக்கு முன்பாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்