“மக்களுக்கு உதவும் எண்ணம் ரஜினிக்கு கிடையாது “மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!…

ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  

மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட உள்ள மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் வித்தியாசமான முறையில் புதுப்புது பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் டீ விற்பது காலணிகள் தைப்பது நுங்கு விற்பது துப்புரவு பணியாளர் பணி செய்வது போன்ற வித்தியாசமான பிரச்சார பயணங்களை நாள்தோறும் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் அப்பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் விவசாயி போல் வேடம் அணிந்து மேடையில் பேசி வரும் பழக்கமும் அவருக்கு உண்டு மேலும் பிரச்சார பயணங்களில் அங்கேயுள்ள மக்களிடம் மக்களோடு மக்களாக சகஜமாக நண்பன் போல் பழகி கஷ்டங்களை கேட்டு அறிந்து அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் உறுதி அளித்து வருகிறார்

மேலும் இன்றைய தினத்தில் திண்டுக்கல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வந்த மன்சூரலிகான் இவ்வாறு பேசினார் அவர் பேசியதாவது திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குடிநீர் பிரச்சனை அந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அணையை கட்டி குடிநீர் பிரச்சனையை தீர்ப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்

மேலும் நான் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவன் இங்குள்ள கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும் ஆகவே என்னை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார் மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார் நடிகர் ரஜினி அவர்கள் புதிய பட அறிவிப்புகள் அல்லது புதிய படங்கள் வெளியாகும் தருவாயில் மட்டும் தனது அரசியல் பயணத்தை பற்றி பேசுகிறார் அதன் பின்பு அவர் அமைதியாக இருந்துவிடுகிறார் பத்திரிகைகளிடம் பேசுவதும் இல்லை மக்களிடமும் பேசுவதும் இல்லை இதன் பின்பே அடுத்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் போது மீண்டும் அரசியல் பற்றி பேசுவார் எளிய மக்களைப் பற்றிய சிந்தனையும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் அவருக்கு கிடையாது என்று மன்சூர் அலிகான் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்