நாட்டைப் பாதுகாக்க…. எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

நாட்டைப் பாதுகாக்க  எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 இடங்களில் உள்ள  பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய விமானங்கள் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 300 தீவிரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியானது.

Image result for Now we do not hesitate to cross the border to protect India against terrorism.

இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் முதல் ஆண்டு விழாவை இந்தியா இன்று கொண்டாடுகிறது. இது அச்சமற்ற @IAF_MCC விமான  வீரர்களால் தொடங்கப்பட்ட வெற்றிகரமான எதிர் பயங்கரவாத நடவடிக்கையாகும். பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் வெற்றியின் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வலுவான விருப்பத்தை தெளிவாக நிரூபித்துள்ளது”

பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் போது காட்சிப்படுத்தப்பட்ட துணிச்சலுக்கும் தைரியத்துக்கும் @IAF_MCC-க்கு நான் சல்யூட் செய்கிறேன். பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கொடுக்கும் முறையிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான எங்கள் அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றியுள்ளது என்றார்.

மேலும் 2016 ஆம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்ஸ் மற்றும் 2019 இன் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் இந்த மாற்றத்திற்கு சான்று என கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டைப் பாதுகாக்க இப்போது எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *