மீண்டும் மோடி வேண்டாம் மோடி….. ராகுலுக்கு பெருகும் ஆதரவு….. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு…!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு குறித்து புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட  கருத்துக் கணிப்புகளின்  முடிவுகள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியாகிய நிலையில் புதிய தலைமுறையும் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

புதியதலைமுறை வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 6 முதல் 8 இடங்கள் வரையும் ,  திமுக கூட்டணிக்கு 31 முதல் 33 இடங்கள் வரையும் கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த கருத்து கணிப்பில்   41.90% திமுகவிற்கும், 27.07% அதிமுகவிற்கும், 4.71% அமமுகவிற்கும், 5.68% மக்கள் நீதி மய்யத்திற்கும், 4.19% நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதோடு  தமிழகத்தில் பிடித்த அரசியல் தலைவர் யார் ? என்ற கேள்விக்கு, 31.01% பேர் மக்கள் மு.க.ஸ்டாலின் என்றும் , 9.66% பேர் எடப்பாடி பழனிசாமி என்றும் ,  6.16% பேர் ஓ.பன்னீர் செல்வம் என்றும் , 5.54% பேர் சீமான் என்றும் , 4.65% பேர் கமல்ஹாசன் என்றும் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 22.43% பேர் நரேந்திர மோடி என்றும் 53.20% பேர் ராகுல் காந்தி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.