“ஒகேனக்கல்லுக்கு செல்ல தடை” ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்….!!!

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது.

ஆகவே காவிரி கரையோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். எனவே அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயிலை போட்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு பரிசல் கவிழ்ந்து போடப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால் ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *