”கதிகலங்கும் உலக நாடுகள்” புதிய ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா…!!

எதிரி நாட்டு ராணுவ அச்சுறுத்தல், இராணுவ ஆதிக்கத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டுமென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை மீறி வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றது. வடகொரியா_வின் இந்த அணு ஆயுத சோதனையானது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சோதனையில் இருந்து பின் வாங்குவதாக இல்லை. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் அன் _னுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் அளிக்கவில்லை என்று தென்கொரிய நாட்டின் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

Image result for Super Large Multiple Rocket Launcher

இந்நிலையில் வடகொரியா நாடு  நேற்று ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.இது அந்நாட்டு சார்பில் கடந்த ஜூலை 25ந்தேதியில் இருந்து வடகொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணை சோதனை ஆகும்.  மேலும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன் மேற்பார்வையின்  ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிக பெரிய லாஞ்சரான ‘சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்’ பரிசோதனையை அந்நாட்டு இராணுவம் நிகழ்த்தியுள்ளது.

வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை

இதுகுறித்து வெளியாகிய செய்தியில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன்,  இந்த புதிய மேம்பட்ட சாதனம் ஒரு மிக பெரிய ஆயுதம் ஆக திகழும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் எதிரி நாட்டினரின் படைகளால் தொடர்ந்து அதிகரித்து வரும் ராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களின் இராணுவ ஆதிக்கத்தின் அழுத்தத்தை தயக்கமின்றி தடுக்கின்ற வகையில் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என்று கிம் ஜாங் அன்  தெரிவித்துள்ளது. வடகொரியா நாட்டின் இந்த முடிவு உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *