ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!!!அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

வடகொரியா,  ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளது .

வடகொரியாஅதிபர் , கிம் ஜோங் தலைமையில் சனிக்கிழமை  இச்சோதனை நடத்தப்பட்டது. அந்த  நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கும், சுய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்றும்  வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனை கொரியா க்கான பட முடிவு

சென்ற பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபருடனான ‘வியட்நாம் பேச்சுவார்த்தை’ தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை  என்பது முக்கியமான தகவலாகும்.

கிம் ஜோங் உன்,இடையில்  ரஷ்யா சென்று, அதிபர் புதினை சந்தித்துப் பேசினார் என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .