திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக் கடை மூடப்பட்டிருந்ததால் அசைவப் பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நேற்று இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சேலம் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அசைவப் பிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் மீன் மார்க்கெட் வழக்கம் போல செயல்பட்டதால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. மேலும் இறைச்சி கடைகள் செயல்பட தடையும், மீன் கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டதால் ஏராளமான அசைவ பிரியர்கள் அங்கு குவிந்தனர். இதனால் மீன் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.