மக்காத கழிவுகளை சேகரிக்கும் முகாம்.. தொடங்கி வைத்த நகர சபை தலைவர்…!!!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் என் வாழ்க்கை என் தூய்மையான நகரம் என்னும் தலைப்பில் வருகிற ஜூன் ஐந்தாம் தேதி வரை மன்னார்குடி நகரில் தினம்தோறும் ஐந்து வார்டுகளில் மக்காத கழிவுகளை சேகரிக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாலாவது வார்டில் நடைபெற்ற முகாமை நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்கள், பழைய காலணிகள், ஆடைகள், கம்பளிகள், வீட்டு பயன்பாட்டு மின்சாதன பொருட்கள் போன்றவற்றை மறு பயன்பாட்டிற்கு வழங்கலாம்.

அதே போல் பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பழைய பேப்பர்கள், மருந்து பாட்டில் போன்றவற்றை மறுசுழற்சிக்கு வழங்கலாம். மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பொருட்களை அந்தந்த வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட மையங்களில் வழங்கலாம். மேலும் பொதுமக்கள் காலை 7:00 மணி முதல் 11 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த மையங்களுக்கு நேரடியாக வந்து பொருட்களை வழங்கலாம். இந்த திட்டத்திற்கு மன்னார்குடி நகர மன்ற நகர மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேபோல் தேவையில்லாத பொருட்கள் இந்த மையத்திற்கு வந்த பின்பு அந்த பொருட்கள் தேவைப்படுபவர்கள் மையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.