நோக்கியாவின் அசத்தல் ஸ்மார்ட்போன் … அதிரடி விற்பனை ஆரம்பம் ..!!

நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கிய 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.2  மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப்-நாட்ச்சுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம் வசதியுடனும், ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்புடனும், ஹெச்.டி.ஆர் 10 வசதி மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வுடனும் மற்றும் 6.3-இன்ச் fullHD+ திரை கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for nokia 7.2 , nokia 6.2

மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது . இதில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவும், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இதில் 3,500எம்.ஏ.ஹெச் அளவிலான பேட்டரியும், வை-பை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.

Related image

இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 3 பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவுடன், முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி  கேமராவும்  வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸரும், 3,500mAh அளவிலான பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வை-பை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Related image

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 249 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ .19,800) என்ற ஆரம்ப விலையுடன் இந்த மாதம் முதலே விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும்  பச்சை, கரி, வெள்ளை  ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,800 என்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,800 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *