“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, தகுதியான பிரதமராக உள்ளவர் தான் நரேந்திர மோடி, எனவே அவரே வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்  பிரசாரம் க்கான பட முடிவு

மேலும் அவர் கூறுகையில் , பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் தான்முதன்மையான மாநிலம் என்று தனியார் நிறுவனம் விருது கொடுத்துள்ளது. அதேபோல  இந்தியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சிறந்த காவல் நிலையம் குறித்த ஆய்வில், தமிழகம் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அண்ணாநகர் காவல் நிலையம் 5வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்று பொய் பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு முதல் ஆள் முக.ஸ்டாலின் தான் என்று முதல்வர் கூறினார்.