இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசலை குழாய் வழியாக எடுத்துச் செல்லும் திட்டத்தை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் உடன் சேர்ந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. இந்த நிலையில் 126 கிலோ மீட்டர் தொலைவில் வங்க தேசத்திலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவிலும் குழாய் அமைத்து வங்கதேசத்திற்கு அதிவேக டீசலை கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்தை நிறைவேற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
அதன்படி குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த திட்டம் 377 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொளி காட்சி வழியாக தொடங்கி வைத்தனர். 10 லட்சம் அதிவேக இந்த குழாய் வழி திட்டம் மூலமாக வங்கதேசத்தில் ஏழு மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் அதிவேக டீசல் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.