தகுதி சான்றும் இல்லாமல் இயங்கி வந்த 5 தனியார் பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் சென்றன. இதனை கண்காணிக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார். எனவே வாகன ஆய்வாளர்கள் தஞ்சாவூரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் தகுதி சான்று, தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கை எடுத்து சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு ரூ 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.